மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
221 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
221 days ago
வேட்டையின் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தங்க கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் கேங்ஸ்டர் படமான ‛கூலி' திரைப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே சென்னை, விசாகப்பட்டினம், டில்லி, மும்பை, தாய்லாந்து போன்ற இடங்களில் நடைபெற்று முடிந்த நிலையில், மீண்டும் சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொடர்ச்சியாக எண்ணூர் துறைமுகத்தில் தற்போது ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கி வருகிறார்.
தொடர்ந்து 10 நாட்கள் அங்கு ஷுட்டிங் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கோகுலம் ஸ்டுடியோவில் ஒரு சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு உடனுக்குடன் எடிட்டிங் செய்யப்பட்டு வருவதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு இரண்டு மாதம் இருந்தால் போதும் என்பதால், அனேகமாக கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாத இறுதியில் இந்த படத்தை வெளியிட வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‛ஜெயிலர் 2' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் டீசருடன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
221 days ago
221 days ago