மெகா பட்ஜெட்டால் கிடப்பில் போடப்பட்ட பயோபிக் படம்
ADDED : 245 days ago
இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சுள்ளான் நடிகர் நடிப்பதாக, பூஜை போடப்பட்டது. ஆனால், அந்த படத்தை, 'மெகா பட்ஜெட்'டில் தயாரிக்க, சுள்ளான் நடிகர் வலியுறுத்தியதால், இவ்வளவு பெரிய தொகையை இந்த படத்திற்காக செலவு செய்தால், போட்ட பணத்தை கூட எடுக்க முடியாது எனச் சொல்லி, இரண்டு நிறுவனங்களில் ஒரு நிறுவனம், தயாரிப்பில் இருந்து பின் வாங்கி விட்டது.
இதையடுத்து, கடந்த, ஆறு மாதங்களாக அந்த படத்தை கிடப்பில் போட்டவர்கள், இப்போது இன்னொரு புதிய நிறுவனத்துடன், 'டீல்' போட்டு, அப்படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.