உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி!

பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி!

'மகாராஜா' படத்தை அடுத்து 'காந்தி டாக்ஸ், ட்ரெயின், ஏஸ்' போன்ற படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது இன்னொரு படத்திலும் நடித்து முடித்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார்கள். அதாவது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடித்து முடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவருடன் நித்யா மேனன், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்திருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் அது குறித்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !