உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் பாஸா பெயிலா? : ரசிகர்களிடம் சதீஷ் கேள்வி

நான் பாஸா பெயிலா? : ரசிகர்களிடம் சதீஷ் கேள்வி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி தொடர் கடந்த 2020ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்து கிட்டத்தட்ட 1200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த சீரியெலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. அத்துடன் தொடரின் நாயகன் சதீஷும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாக்கியலெட்சுமி என்கிற பப்ளிக் எக்ஸாம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. நான் பாஸா பெயிலா? என்பது ரசிகர்கள் உங்கள் கையில் தான் இருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்துவிட்டேன். ஆனாலும், தொடர்ந்து முயற்சிப்பேன்' என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !