தமிழ் இயக்குனர் படத்தில் யஷ்
ADDED : 191 days ago
கன்னட நடிகரான யஷ், ‛கேஜிஎப் 1 மற்றும் 2' படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னடம், ஆங்கிலத்தில் நேரடியாகவும், பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு பின் தமிழ் இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளாராம் யஷ்.
இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் போன்ற படங்களை இயக்கியவர் மித்ரன். தற்போது சர்தார் 2 படத்தை கார்த்தியை வைத்து இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தை முடித்ததும் யஷ் நடிக்கும் படத்தை இயக்க போகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.