மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
194 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
194 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
194 days ago
உறியடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகரும், இயக்குனருமான விஜய் குமார். தற்போது இவர் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி உடன் இருக்கும் போட்டோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‛‛எப்படியோ ரஜினி சாரை சந்தித்துவிட்டேன். கூலி படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து ஆசி பெற்றது வாழ்நாளுக்குமான சிறந்த தருணம். லவ் யூ தலைவா. இந்த சந்திப்பிற்கு காரணமான நண்பர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.
194 days ago
194 days ago
194 days ago