உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு ரசிகர்களுடன் 'டிராகன்' கொண்டாட்டம்

தெலுங்கு ரசிகர்களுடன் 'டிராகன்' கொண்டாட்டம்


அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டிராகன்'. முதல் வார இறுதியில் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்தது. வார நாட்கள் ஆரம்பமான பின்னும் படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியான இப்படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் விசாகப்பட்டிணத்தில் உள்ள சில தியேட்டர்களில் ரசிகர்களுடன் சேர்ந்து இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, பிரதீங் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் டுடே' படம் அங்கு வெற்றிகரமாக ஓடியது. அதனால், 'டிராகன்' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படமும் லாபகரமான படமாகவே அமையும். அடுத்தடுத்த வெற்றிகளால் தெலுங்கிலும் பிரதீப் பிரபலமாகிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !