மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
217 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
217 days ago
ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தமிழ் சினிமாவில் நடனம் என்றால் அது பாரம்பரிய நடனங்கள் மற்றும் பரதநாட்டியம்தான். ஆனால் முதன் முதலாக 'வித்யாபதி' என்ற படத்தில் தேவதாசி மோகானாம்பாளாக நடித்த தவமணி தேவி, 'டைட்டிலேட்டிங் வெஸ்டர்ன் டைப்' என்கிற மேற்கத்திய நடனத்தை இந்த படத்தில் ஆடினார். ரெயின்பேர்ட் ஆங்கில நடன கலைஞர் இந்த நடனத்தை இயக்கினார். இதற்கு சி.ஜி.ராப் மற்றும் அவரது குழுவினர் பின்னணி இசை அமைத்தனர். இந்தப் பாடலில் தமிழுடன் ஆங்கிலச் சொற்களும் இருந்தது.
'அதோ ரெண்டு கருப்புக் கண்கள் என்னைப் பார்த்து ஒருமுறை, இருமுறை கண்ணை சிமிட்டி, கை காட்டி என்னை அழைக்கிறது உனக்காக ஆடுவேன்' என தொடங்கியது அந்த பாடல், ஒரு ஆங்கில பெண், தமிழ் பாடலை பாடினால் எப்படியான உச்சரிப்பு இருக்குமோ அப்படியே இந்த பாடலும் இருந்தது.
வை.மு.கோதைநாயகி எழுதிய 'வித்யாசாகர்' என்ற நாவல் மேடை நாடகமாக நடத்தப்பட்டது. அந்த நாடகமே 'வித்யாபதி' என்ற பெயரில் சினிமா ஆனது. இதில் டி.ஆர்.ராமச்சந்திரன், திருச்சூர் பிரேமாவதி, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்ரமணியம், எம்.ஆர்.சுவாமிநாதன், டி.என்.சிவதாணு, எம்.எஸ்.எஸ். பாக்யம், டி.ஜி. கமலா தேவி, சி.கே. சரஸ்வதி, ஆர். மாலதி மற்றும் எம்.எம். ராதா பாய் உள்பட பலர் நடித்திருந்தனர். ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கி இருந்தார். 1946ம் ஆண்டு படம் வெளிவந்தது.
217 days ago
217 days ago