மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
215 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
215 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
215 days ago
பாரதிராஜாவின் இயக்கத்தில் 1983ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கண்ட படம் 'மண்வாசனை'. மதுரையில் மட்டும் ஒரு வருடம் ஓடியது. காரணம் படம் மதுரை மண் வாசனையை பேசியது. இந்த படத்தில் நடிப்பதற்காக மதுரை கோவிலில் வளையல்கடை வைத்திருந்த பாண்டியனை அழைத்து வந்தார். கேரளாவில் இருந்து ரேவதியை அழைத்து வந்தார் பாரதிராஜா. பாண்டியனுக்கு முழுமையான நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார்.
ரேவதியை தேனி பகுதி பெண்களுடன் பழக வைத்து அவர்களின் மேனரிசத்தை கற்றுக் கொள்ள வைத்தார். படத்தின் பல காட்சிகளில் அவர் வெட்கப்பட வேண்டும். குறிப்பாக 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலில் அவர் வெட்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
கிராமங்களில் பெண்கள் பெரியமனுஷியாவது மிகப்பெரிய சடங்கு. படத்தில் முத்துப்பேச்சி (ரேவதி) பெரியமனுஷி ஆகிவிடுவாள். முறைமாமன் வீரணந்தான்(பாண்டியன்) பச்சை ஓலையில் குடிசை போடவேண்டும். அப்போது ஏற்படும் பார்வை, மெல்லியதாக எட்டிப் பார்க்கும் காதல். பிறகு பள்ளத்தில் விழுவார் ரேவதி. அவரை தாங்கி பிடிப்பார் பாண்டியன் தெடர்ந்து 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடல் வரும்.
முறைப்படி பரதநாட்டியம் கற்றிருந்த ரேவதிக்கு வெட்கம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் கேமரா முன் அவருக்கு வெட்கம் வரவில்லை. அதோடு பாண்டியனை கண்டாலே அவருக்கு சிரிப்புதான் வந்தது. இதனால் பாரதிராஜா ஒரு யுக்தியை கையாண்டார். ரேவதி வெட்கப்பட வேண்டிய காட்சியில் பின்னால் நின்று ஒருவர் கேமராவிற்கு தெரியாமல் அவர் இடுப்பில் ஒரு நீளமான புல் கொண்டு உரசுவார், உடனே அந்த கூச்சத்தால் வெட்கப்படுவார் ரேவதி. இப்படித்தான் படத்தில் வரும் ரேவதியின் அனைத்து வெட்கப்படும் காட்சிகளும் படமானது. ரேவதியின் அந்த வெட்கம்தான் ரசிகர்களை தியேட்டருக்கு அள்ளி வந்தது.
215 days ago
215 days ago
215 days ago