லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் 'கூலி' டீசர் ?
ADDED : 219 days ago
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கூலி'.
இப்படத்தின் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அமாவாசை தினமான இன்று முதல் இப்படத்தின் அப்டேட் ஆரம்பமாகி தொடர்ந்து வரும் எனத் தெரிகிறது.
வரும் மார்ச் மாதம் 14ம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் படத்தின் டீசர் வெளியாகலாம் என்று ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.