மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்!
ADDED : 265 days ago
கடந்த 2020ம் ஆண்டில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2ம்' பாகத்தில் என நடிக்கின்றா ர் இந்த பாகத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவில்லை. இவருக்கு பதிலாக சுந்தர்.சி இப்படத்தை இயக்குகிறார் என அறிவித்தனர்.
சமீபகாலமாக இதன் முன் தயாரிப்பு பணிகளில் சுந்தர். சி ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 6ம் தேதி சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இதன் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 15ந் தேதி அன்று துவங்குகிறது.