'குட் பேட் அக்லி' டீசர்; ரன்னிங் டைம், வெளியீட்டு நேரம் தெரியுமா?
ADDED : 265 days ago
'விடாமுயற்சி' படத்திற்கு அடுத்து நடிகர் அஜித் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஏப்.10ல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் நாளை (பிப்.,28) வெளியாகும் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் இந்த டீசர் நாளை மாலை 7:03க்கு வெளியாவதாகவும், ஒரு நிமிடம் 34 நொடிகள் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், குட் பேட் அக்லி படத்தை பெரிதும் எதிர்பார்க்கும் அஜித் ரசிகர்களுக்கு, இந்த டீசர் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.