மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
216 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
216 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பல நடிகர்கள் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமான நபர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா. தற்போது சின்னத்திரையிலும், சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் உதயா கடந்த சில நாட்களுக்கு முன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நோய் தீவிரத்தின் காரணமாக இடது காலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டனர்.
தற்போது தொடர்ந்து மருத்துவ சிகிச்சை செய்வதற்கும், அன்றாட செலவுகளுக்கும் மிகவும் கஷ்டப்பட்டு வரும் உதயாவிற்கு சக நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் டைகர் கார்டன் தங்கத்துரை உதயாவை நேரில் சந்தித்து பொருளுதவி செய்துள்ளார். அதுபோல கேபிஒய் பாலாவும் உதயாவை நேரில் சந்தித்து பணம் தந்து உதவியிருக்கிறார்.
216 days ago
216 days ago