மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
193 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
193 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் பேட் அக்லி'. ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் இன்று இரவு வெளியாக உள்ளது.
அதற்காக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதற்குரிய பதிவுகள் தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. ஆனால், படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் பெயரை 'டேக்' செய்யவில்லை. இருந்தாலும், ஜிவி பிரகாஷ் அவரது பதிவுகளில் இந்தப் படத்திற்கான பதிவுகளையும், ரிபோஸ்ட்டுகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் அவர் மாற்றப்பட்டு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாக சொல்லப்பட்டது. முன்னணி நடிகரான அஜித் படத்தில் இப்படி ஒரு இசையமைப்பாளர் புறக்கணிக்கப்படுவது சரியல்ல.
சில ரசிகர்கள் இது குறித்து கமெண்ட் செய்தும் படக்குழு அதற்கு எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை.
193 days ago
193 days ago