நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்?
ADDED : 261 days ago
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு நடிகர் அருண் விஜய்யின் சினிமா கேரியர் பீக்கானது. அவர் கதாநாயகனாக நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அவருக்கென தனி இடம் உள்ளது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர படங்களில் அருண் விஜய் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் இயக்கி, நடித்து வரும் இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இதையடுத்து இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு அருண் விஜய்யை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளனர். இதற்காக அவர் மிகப்பெரிய சம்பள தொகையை கேட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால், அவர் இன்றும் ஒப்பந்தம் ஆகவில்லை என கூறப்படுகிறது.