தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்
ஹிந்தியில் பல படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு லியோ, மகாராஜா விடுதலைப் பார்ட்- 2 போன்ற படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் டகாய்ட் என்ற படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். அதிவி சேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் அனுராக் காஷ்யப் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள கேரக்டரின் பர்ஸ்டர் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் ஐயப்ப பக்தரான அனுராக் காஷ்யப் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளில் இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
இதுகுறித்து அனுராக் காஷ்யப் கூறுகையில், இரண்டு மொழிகளிலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவது சவாலான விஷயமாகும். இந்த ரோலை நான் மிகவும் ரசித்து நடித்து வருகிறேன் என்கிறார்.