கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி
ADDED : 256 days ago
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 25வதுபடம் ‛கிங்ஸ்டன்'. இதில் நாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார். அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கடலில் நடக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி உள்ளது. இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பட விழாவில் பேசிய திவ்ய பாரதி, ‛‛இந்த படத்தின் கதையை சொல்ல வந்தபோது கமல் ஒரு லுக் அவுட் வீடியோ காண்பித்தார். அப்போதே இதில் நடிக்க முடிவு பண்ணிவிட்டேன். ஜிவி உடன் இரண்டாவது படம். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன். நல்ல பண்ணியிருக்கேன் என நம்புகிறேன். கிங்ஸ்டன் விஷுவல் டிரீட்டாக கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும்'' என்றார்.