மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
214 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
214 days ago
1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமிதாப் பச்சன், கடந்த 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 82 வயதாகிறது. ரஜினி நடித்து கடைசியாக திரைக்கு வந்த வேட்டையன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த நேரத்தில் தனது இணையதள பக்கத்தில், நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் அமிதாப்பச்சன்.
இந்த பதிவை பாலிவுட் ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் பல கோணங்களில் வெளியிட்டு வந்தன. குறிப்பாக வயதாகி விட்டதால் அவர் சினிமாவை விட்டு வெளியேறப்போகிறார். அதைத்தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்றும் செய்தி வெளியிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதைதான் அப்படி பதிவிட்டிருந்தேன். வேறு எதுவும் இல்லை'' என்று ஒரு விளக்கம் கொடுத்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .
214 days ago
214 days ago