மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
215 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
215 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
215 days ago
ஹிந்தியில் வெளியான எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபலமானவர் கியாரா அத்வானி. தெலுங்கு, ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது கன்னட நடிகர் யஷ் நடிப்பில் நடிகை கீது மோகன்தாஸ் இயக்கி வரும் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து வந்த கியாரா அத்வானி கடந்த 2023ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக குழந்தைகளின் காலணிகளை பதிவு செய்து அறிவித்திருக்கிறார். அதோடு, எங்களுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு விரைவில் வரப்போகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகைகளும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
215 days ago
215 days ago
215 days ago