மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
213 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
213 days ago
தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீ லீலா, புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸி என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ், ஹிந்தி ரசிகர்களுக்கும் பரிட்சயமாகி விட்டார். தற்போது அவர் தமிழில் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் ஆஷிகி 3 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாணுடன் உஸ்தாத் பகத்சிங், ரவிதேஜா உடன் மாஸ் ஜாதரா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி ஆறே மாதங்களில் அவரை 11 மில்லியன் பேர் பாலோ செய்து வருகிறார்கள். அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6 மில்லியன் பேர் அவரை பாலோ செய்தார்கள். அதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மில்லியன் பேர் பின் தொடர்ந்தார்கள். இந்நிலையில் தற்போது மார்ச் ஒன்றாம் தேதி அவரை 11 மில்லியன் பேர் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஸ்ரீ லீலாவையும் அதிகமான ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
213 days ago
213 days ago