பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி
தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக கல்பனா பணியாற்றி வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.
அங்கு டாக்டர்கள், கல்பனாவை பரிசோதித்ததில், அவர் அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. தற்போது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.