உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலுடன் நடிப்பதற்காகவே கிளம்பி வந்த ஒடிசா இளைஞர் ; லட்சியம் நிறைவேறியது

மோகன்லாலுடன் நடிப்பதற்காகவே கிளம்பி வந்த ஒடிசா இளைஞர் ; லட்சியம் நிறைவேறியது

ஒடிசாவை சேர்ந்த சந்து நாயக் என்பவர் அங்குள்ள சேனல் ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பிரபலமானவர். அது மட்டுமல்ல ஹிந்தியில் சல்மான் கான் உள்ளிட்டோரின் படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு மோகன்லாலின் படங்களை பார்த்து பார்த்து எப்படியாவது அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. இதற்காகவே ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு கிளம்பி வந்த அவர் போர்ட் கொச்சியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வாய்ப்பு தேடி சினிமா சார்ந்த நபர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இப்போது தனது லட்சியத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

ஆம்.. தற்போது சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் 'ஹிருதயபூர்வம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சந்து நாயக். அதிலும் பல காட்சிகளில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் விதமான ஒரு சமையல்காரன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளாராம். மோகன்லாலுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவின் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !