மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
210 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
210 days ago
மலையாள திரையுலகில் ரசிக்கத்தக்க படங்கள் பல வெளியாகி தமிழ் ரசிகர்களை கூட ஆச்சரியப்படுத்தினாலும் அங்கே உள்ள தயாரிப்பாளர்கள் தங்கள் திரையுலகம் வருடந்தோறும் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெற்றி பெறும் படங்களின் எண்ணிக்கை வெகு குறைவுதான் என்றும் பல படங்கள் தோல்வி அடைகின்றன என்றும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியாக கோடிகளில் குறிப்பிடப்படும் வசூல் எல்லாம் பொய்யானவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி வந்தனர்.
இந்த நிலையில் பட தயாரிப்பு செலவில் நடிகர்களுக்கான சம்பளமே மிகப்பெரிய சுமையாக மாறிவிட்டது என்றும், நடிகர் சங்கம் நடிகர்களின் சம்பளத்தை குறைத்து ஒரு வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கேரள பிலிம்ஸ் சேம்பர் ஆகியவை வலியுறுத்தி வந்தன. ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மலையாள திரையுலகில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இதற்கு நடிகர் சங்கத்தில் மட்டும் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் மற்ற துறைகள் அனைத்துமே ஆதரவாகவே நின்றன. அதேசமயம் சமீபத்தில் கேரள அரசு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கேரள பிலிம்ஸ் சேம்பர் ஆகியவற்றை அழைத்து பேசி திரையுலகில் தற்போது இருக்கும் இந்த சூழலில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து கேரள பிலிம் சேம்பர் தாங்கள் ஜூன் 1 முதல் அறிவித்திருந்த காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதே சமயம் தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள கோரிக்கைகளுக்கு சுமூகமான முடிவு எட்டப்படா விட்டால் அதன் பிறகு இனி வரும் நாட்களில் இந்த ஸ்ட்ரைக் நடப்பதை தவிர்க்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
210 days ago
210 days ago