உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்!

விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்!


நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. தற்போது அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் 'ஆர்யன்' எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் உள்ளது.

செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இதில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இன்று செல்வராகவன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !