மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
207 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
207 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
207 days ago
2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய முதல் படம் 'சென்னை -28'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு அவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கியவர், பின்னர் அஜித் நடிப்பில் 'மங்காத்தா' படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். அந்த படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், 2016ம் ஆண்டு தனது முதல் படமான 'சென்னை- 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது, 'மாநாடு, கஸ்டடி, கோட்' படங்களுக்கு பிறகு சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார். முதல் இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோரே இந்த படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
207 days ago
207 days ago
207 days ago