உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மைலாஞ்சி'யில் முக்கோண காதல்

'மைலாஞ்சி'யில் முக்கோண காதல்

எழுத்தாளர் அஜயன் பாலா இயக்கி வரும் படம் 'மைலாஞ்சி'. டாக்டர் பா.அர்ஜுனன் தயாரிக்கிறார், 'கன்னி மாடம்' படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார், கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர முனீஷ்காந்த், சிங்கம்புலி ஆடை வடிவமைப்பாளர் தாட்ஷா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார்.

அஜயன் பாலா கூறியிருப்பதாவது : உலகில் கோடிக்கணக்கான காதல்கள் உருவாகி இருக்கிறது. அப்படி ஒரு காதல் தான் படத்தின் கதை. பறவைகளை புகைப்படும் எடுக்கும் இயற்கை ஆர்வலரான நாயகனுக்கும் 'மைலாஞ்சி' என்ற அபூர்வ பறவையை விற்பனை செய்யும் நாயகிக்குமான காதல் படத்தின் மைய இழை. அதற்குள் இன்னொரு பெண் நுழையும்போது ஏற்படும் மாற்றங்கள்தான் திரைக்கதை. முக்கோண காதல் என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட முடியாத அளவிற்கு மென்மையான உணர்களை கொண்டதாக, காதலின் அடுத்த நகர்தலை சொல்வதாக இருக்கும். மூன்றாவதாக வரும் அந்த பெண் யார், அதில் நடித்திருப்பது யார் என்பதை இப்போதைக்கு சஸ்பென்சாக வைத்திருக்கிறோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !