ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன்
ADDED : 238 days ago
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே கில்லி, 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, பாபா, பில்லா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகி மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வசூலை பெற்றன.
இந்தநிலையில் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று இரு படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. கடந்த 2004ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ்ராஜ் நடித்து வெளிவந்த 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படமும், கடந்த 2016ம் ஆண்டில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடித்து வெளிவந்த 'ரஜினி முருகன்' படமும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆவதாக சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி இருவரும் தற்போது சுதா இயக்கத்தில் ‛பராசக்தி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.