ஆரம்பமானது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பு வீடியோவுடன் இந்த வருட பொங்கல் தினத்தன்று வெளிவந்தது.
2023ல் வெளிவந்த 'ஜெயிலர்' படம் பெரும் வெற்றியைப் பெற்று 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்பின்பு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணி பூர்த்தி செய்ய மீண்டும் களத்தில் இறங்கியது.
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதனால், 'ஜெயிலர் 2' படத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த வருடம் இப்படம் வெளியாகலாம்.