சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து
ADDED : 253 days ago
டிராகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஷ்வத் மாரிமுத்து அடுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஒரு விருது விழாவில் அஷ்வத் மாரிமுத்துவிடம் சிம்பு 51வது பட அப்டேட் பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது, சிம்பு 51வது படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறோம். அடுத்த வருட சம்மருக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.