மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
204 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
204 days ago
பொதுவாக பாலசந்தர் அறிமுகப்படுத்தும் நடிகர், நடிகைகள் பிற்காலத்தில் பெரிய அளவிற்கு வளர்வார்கள். காரணம் அவர் தேர்வு அப்படி இருக்கும். ஆனால் அரிதாக ஒரு சிலர் சோபிக்க முடியாமல் போனதும் உண்டு. அவர்களில் ஒருவர் ராமகிருஷ்ணா.
கன்னட சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணனை 'பொய்கால் குதிரை' படத்தின் தமிழில் மூலம் அறிமுகப்படுத்தினார். இந்த படம் கிரேஸி மோகன் நடத்தி வந்த 'மேரேஜ் மேட் இன் சலூன்' என்ற நாடகத்தின் திரைவடிவம். முழுநீள காமெடி சித்ரம்.
இந்த படத்தில் அறிமுகமான நடிகர்கள் இன்னும் இருவர். ஒருவர் கவிஞர் வாலி, இன்னொருவர் நடிகர் சார்லி. வாலி ஒரு சில படங்களுடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சார்லி இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அண்ணே அண்ணே, காதலே என் காதலே, நிசப்தம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ராமகிருஷ்ணன் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கன்னட படங்களுக்கே திரும்பினார். அங்கு நாயகனாகவும், குணசித்ர வேடங்களிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னாளில் அரசியலிலும் குதித்தார்.
204 days ago
204 days ago