உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம்

சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம்

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேகா ஷெட்டி, மாளவிகா என இரு நாயகிகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், சரவணன், 'கஞ்சா' கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லூரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இரா. சரவணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எம்.குரு கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை ஸம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது, எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.

படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !