பாவனா நடித்துள்ள ‛தி டோர்' படத்தின் டீசர் வெளியானது
ADDED : 220 days ago
மலையாள நடிகை பாவனா தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற பல படங்களில் நடித்தார். 2010க்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காத பாவனா 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தி டோர் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி, பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜெயதேவ் என்பவர் இயக்கி உள்ளார். இதன் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் திரில்லிங்கான காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது. ஹாரர் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ள இப்படம் இம்மாதம் வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.