உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாக சைதன்யாவுடன் சேர்ந்து போட்ட 'டாட்டூ'வை அழித்துவிட்டாரா சமந்தா ?

நாக சைதன்யாவுடன் சேர்ந்து போட்ட 'டாட்டூ'வை அழித்துவிட்டாரா சமந்தா ?

நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா சில வருடங்கள் காதலித்து, பின்னர் கோவாவில் 'டெஸ்டினேஷன்' திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், நான்கு வருடங்களுக்குள்ளேயே இருவரும் பிரிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களது பிரிவுக்கான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை.

நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்.

நேற்று தனது இன்ஸ்டா தளத்தில் 18 புகைப்படங்களைப் பகிர்ந்து அதற்கு சில வரிகளில் குறிப்பும் எழுதியிருந்தார் சமந்தா. ஆனால், அவர் பகிர்ந்த முதல் படமே ரசிகர்களின் கமெண்ட்டுகளில் சிக்கிக் கொண்டது.

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலர்களாக இருந்தபோது வலது முழங்கையில் ஒரே மாதிரியான டாட்டூவை போட்டுக் கொண்டனர். ஆனால், சமந்தா நேற்று பகிர்ந்த புகைப்படத்தில் அந்த 'டாட்டூ' அழிந்த நிலையில் இருந்தது. அதைத்தான் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அதை போட்டோஷாப் மூலம் அழித்துள்ளாரா அல்லது நிரந்தரமாகவே அழித்துள்ளாரா என்பது தெரியவில்லை.

அதே சமயம், அந்த டாட்டூவை தனது கையில் இன்னமும் அப்படியே வைத்திருக்கிறார் நாக சைதன்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !