குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது
ADDED : 262 days ago
விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் கதைகளத்தில் உருவாகி உள்ள இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில் சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தின் பிரமோசன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் முதல் பாடலாக ‛ஓ ஜி சம்பவம்' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதி உள்ளார். இதை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அதோடு ஆங்காங்கே அஜித்தின் வசனமும் இடம் பெற்றுள்ளது. கேஜிஎப் படத்தில் வரும் தீரா தீரா பாடலின் சாயலில் இந்த பாடல் அமைந்துள்ளது.