கதை நாயகன் ஆன ஹரி கிருஷ்ணன்
மெட்ராஸ் படத்தில் ஜானி கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன். அதன்பிறகு பல படங்களில் இரண்டாவது நாயகன், ஹீரோவின் தம்பி என்பது மாதிரியான கேரக்டரில் நடித்திருந்தாா். சமீபத்தில் ஜென்டில்வுமன் படத்தில் நாயகனாக நடித்தார். தற்போது அவர் 'வேம்பு' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் வி.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர். மணிகண்டன் முரளி இசையமைதுள்ளார்.
இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, “யதார்த்தமான ஒருவரின் வாழ்வியல் கதையாக இந்த படம் இருக்கும். தங்களது சொந்த வாழ்க்கையைத் தாண்டி அவர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல் அவர்களை எப்படி பெரிய மனிதர்கள் ஆக்குகிறது என்கிற விதமாக இதன் கதை உருவாகியுள்ளது. இது இருந்தால் எல்லோருமே தங்களை பாதுகாப்பாக வழி நடத்திக் கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தை இந்த கதையில் சொல்லி இருக்கிறோம். இது சமூகத்திற்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக இருக்கும்'' என்றார்.