உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன், பிரியாமணி, மமிதா பைஜூ, வரலட்சுமி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில் தற்போது நடிகர் நிழல்கள் ரவியும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன் விஜய்யின் பல படங்களில் நிழல்கள் ரவி நடித்துள்ளார். கடைசியாக 2011ல் காவலன் படத்தில் விஜய் உடன் நடித்தார். அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இந்த ஜனநாயகன் படத்தில் இணைந்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !