9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா
ADDED : 198 days ago
தமிழில் விஜய் நடித்த ‛பிரியமுடன், யூத்' போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. தொடர்ந்து ஜித்தன் படத்தையும் இயக்கினார். இவரிடம் தான் மிஷ்கின் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2016ம் ஆண்டில் தமிழில் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் என்ற படத்தை இயக்கினார். அந்தபடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு வின்சென்ட் செல்வா தமிழில் 'சுப்பிரமணி' என்கிற புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.