மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
195 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
195 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
195 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
195 days ago
மலையாளத் திரையுலகத்தில் இதுவரை வெளிவந்த படங்களின் வசூல் சாதனையை 'எல் 2 எம்புரான்' படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இப்படம் அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
படத்திற்கான முன்பதிவு இன்று ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திற்குள்ளாக 96 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே ஒரு ஆன்லைன் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியத் திரைப்படங்களில் இப்படியான ஒரு மணி நேர முன்பதிவில் 'லியோ' படம் 82 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது 'எல் 2 எம்புரான்' படம் முறியடித்துள்ளது.
கேரளாவில் மட்டுமே 5 கோடிக்கும் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் நேரடியாக முன்பதிவு செய்ய ரசிகர்கள் முண்டியத்து ஓடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
தமிழகத்தில் மலையாளப் பதிப்பிற்கான முன்பதிவு மட்டும் ஆரம்பமாகி உள்ளது.
195 days ago
195 days ago
195 days ago
195 days ago