75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!!
ADDED : 239 days ago
‛நாயகன்' படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‛தக்லைப்'. இந்த படத்தில் சிம்புவும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். அவர்களுடன் திரிஷா, அசோக்செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜூன் ஐந்தாம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்னும் 75 நாட்களில் தக்லைப் வெளியாகும் என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சிம்பு ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் வெளியிட்டு உள்ளார்கள்.