மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
190 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
190 days ago
தெலுங்கு சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சுமார் 1800 கோடி வரை உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குனர் சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி தற்போது சினிமா உலகில் அறிமுகமாகி உள்ளார்.
அகிம்சையை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'காந்தி தாத்தா செட்டு' என்ற படத்தில் சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. தற்போது இந்த திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகி இருக்கிறது. அமேசான் பிரைம் தளத்தில் 'காந்தி தாத்தா செட்டு' படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இந்த திரைப்படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று குவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக சுக்ரிதி தாதாசாஹேப் பால்கே விருதை வென்றுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
190 days ago
190 days ago