சமந்தாவின் நிறைவேறாத ஆசை
ADDED : 249 days ago
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திருமணம், விவாகரத்து, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குறிப்பிட்டு சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார். பேமிலி மேன், சிட்டாடல் போன்ற வெப்சீரிஸ்களில் நடித்தவர் இப்போது மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்கிறார். இதுதவிர தயாரிப்பிலும் இறங்கி உள்ளார்.
சமந்தா சிட்னியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் சிட்னிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை குறித்து கூறியதாவது, 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் கல்லூரி படித்த காலகட்டத்தில் மேற்படிப்பு சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அது நிறைவேறாமல் போனது என தெரிவித்துள்ளார்.