வீர தீர சூரன் முதல் நாள் வசூல்
ADDED : 198 days ago
விக்ரம். துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து அருண்குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்த திரைப்படம் பல சிக்கல்களை தாண்டி நேற்று மாலை காட்சிகளிலிருந்து வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஒரு சில திரையரங்கில் மட்டும் மாலை 4 மணிக்கும் மற்ற திரையரங்களில் மாலை 6 மணி முதல் காட்சிகளை திரையிட்டனர்.
தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் 3.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதற்கு காரணம் காட்சிகள் குறைவானதே. நாட்கள் செல்ல செல்ல படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது.