தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்!
ADDED : 189 days ago
தனுஷ் தற்போது ஹிந்தியில் 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‛இட்லி கடை, குபேரா' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகளில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் தமிழில் ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கவுள்ளார். மேலும், இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஜெயராம் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இதன் மூலமாக தனுஷ், ஜெயராம் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.