'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா!
ADDED : 186 days ago
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக தமன்னா சில படங்களில் சிறப்பு பாடலுக்கு நடனமாடி வருகிறார்.
அந்த வரிசையில் கடந்த 2018ல் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன், இலியானா நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் 'ரெய்டு'. தற்போது ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் 'ரெய்டு 2' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக வாணி கபூர் நடிக்கிறார். இப்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு தமன்னா நடனமாடுகிறார். இதன் படப்பிடிப்பு க்ளப்பில் படமாக்கியுள்ளனர். இப்பாடலை ஹனி சிங் பாடியுள்ளார்.