உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது!

மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது!


எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், வருகிற மே 15ம் தேதிக்குள் இந்த படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்பையும் முடித்து விட இயக்குனர் எச்.வினோத் திட்டமிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் விரைவில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க தயாராகும் எச்.வினோத், அதையடுத்து பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்த ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. மேலும், இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஜூன் மாதத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார் விஜய். இதற்காக தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !