சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி'
ADDED : 190 days ago
அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிபிரியன், செல்வி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'மெட்ராஸ் மேட்னி'. இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை மெட்ராஸ் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை எஸ்.ஆர். பிரபு அவரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இதனை டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.