பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி'
ADDED : 234 days ago
‛வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி' போன்ற படங்களை இயக்கியவர் பொன்ராம். இதில் சிவகார்த்திகேயனை வைத்தே அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில் தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‛கொம்பு சீவி' என்ற படத்தை இயக்கி வருகிறார் பொன்ராம்.
சரத்குமார் , காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த கொம்பு சீவி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இது குறித்த தகவலை ஒரு போஸ்டருடன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சண்முக பாண்டியன்.