விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்!
ADDED : 189 days ago
அஜித் நடித்துள்ள ‛குட் பேட் அக்லி' படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான ‛லியோ' படத்தின் டிரைலரை 24 மணி நேரத்தில் 31.4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருந்தார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சாதனையை எந்த படங்களும் முறியடிக்காத நிலையில், தற்போது அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர் அதை முறியடித்துள்ளது. இந்நிலையில் அடுத்தபடியாக வெளியாகும் விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் டிரைலர் ‛குட் பேட் அக்லி' டிரைலர் சாதனையை முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.