வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன்
ADDED : 191 days ago
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் இன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'புஷ்பா 2' படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து தமிழ் இயக்குனரான அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இதனிடையே, அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வீட்டில் கேக் வெட்டி அமைதியாகக் கொண்டாடி உள்ளார். 'புஷ்பா 2'க்குப் பிறகான சர்ச்சைகளால் அவர் பொதுவெளியில் வருவதை கடந்த சில மாதங்களாகக் குறைத்துக் கொண்டார்.