ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம்
ADDED : 227 days ago
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மூத்த நடிகர்களில் ஒருவர். ஆனால் தற்போதும் ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஏன் இயக்குனர் ராஜமவுலியுடன் இணையவில்லை என்கிற கேள்விக்கு அவர் கூறியதாவது, ராஜமவுலி ஒரு படத்திற்கு மூன்று, நான்கு வருடங்கள் எடுத்து கொள்கிறார். அதனால் என்னால் ஒரே படத்தில் அவ்வளவு காலம் நடிக்க முடியுமா என்பது குறித்து தெரியவில்லை. நான் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தான் அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.